ராமேஸ்வரம் ஸ்ரீ குழந்தை வேலன் திருக்கோயில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்! – தவெக மாவட்டச் செயலாளர். மலர்விழி ஜெயபாலா தலைமையில் மாபெரும் அன்னதானம்!!
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மல்லிகை நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குழந்தை வேலன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவின் சிறப்பு நிகழ்வாக பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் தவெக கிழக்கு மாவட்ட செயலாளர். மலர்விழி ஜெயபாலா தலைமையில் நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமேஸ்வரம் நகர் இணை பொறுப்பாளர் பொன் பஞ்சா சிறப்பாக செய்திருந்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானத்தை பெற்று விழாவை சிறப்பித்தனர். மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சி பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக