குடியாத்தம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம்! -அசம்பாவிதம் ஏற்படும் முன் புதிய கட்டிடம் கட்டப்படுமா?
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் கிராமத்தில் உள்ள நெல்லூர்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதுடன், கட்டிடத்தில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளன.
ஆபத்தான கட்டிடம் என்பதால் ஊராட்சி அலுவலகம் தற்போது நூலக கட்டிடத்தின் சிறிய பகுதியில் செயல்பட்டு வருகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து பழைய கட்டிடத்தை அகற்றி, புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக