வண்டல் மண் அள்ளும் அனுமதிக்கு ரூ.3000 லஞ்சம் ஊராட்சி ஒன்றிய பெண் பொறியாளர் கைது !!


ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய் வண்டல் மண் அள்ளும் அனுமதிச் சீட்டு தர ரூ.3000 வாங்கிய ஊராட்சி ஒன்றிய பெண் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார் இது பற்றிய விவரம் வருமாறு ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் உதவி பொறியாளர் ஷேக்கா தில்ஷாத் பர்வீன் 43 இவரிடம் விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க பயணச்சீட்டு கேட்டு ஒருவர் அணுகியுள்ளார் அதற்கு அந்த நபரிடம் ஷேக்கா தில்ஷாத் பர்வீன் ரூ.3000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது கேட்ட பணத்தில் அந்த நபர் 200 வழங்கிய போதும் மீதப் பணம் வேண்டும் என ஷேக்கா தில்ஷாத் பர்வீன் கேட்டு வந்துள்ளார் மேலும் பணம் கொடுக்க விரும்பாத அந்த நபர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளித்தார் போலீஸாரின் அறிவுறுத்தலின் படி ராமநாதபுரம் சேதுபதி நகரில் உள்ள ஷேக்கா தில்ஷாத் பர்வீன் வீட்டில் வைத்து ரூ. 3000 லஞ்சம் வாங்கும் போது அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர் ! 

செய்தியாளர் கார்மேகம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!