குடியாத்தம் அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் அமைப்பு மற்றும். இன்னர் வீல் சங்கம் இணைந்து சுமார் 40,000 மதிப்பீட்டில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நம் பள்ளியில் முன்னாள் மாணவர் அமைப்பு மற்றும் இன்னர்வீல் சங்கம் இணைந்து பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (பழுது நீக்கி) சுமார் 40,000 செலவில் வழங்கியமைக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் மற்றும் தொடக்க விழா பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ். சுபாஷினி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக என் எஸ் எஸ் திட்ட அலுவலர். ஆர். ஜெயகுமார் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் முன்னாள் மாணவர் டாக்டர். சுகுமார், கஸ்தூரி சுகுமார், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் V. சடகோபன், பள்ளி அம்பாசிடர் புலவர். கோ. மணி,இன்னர்வீல் சங்க தலைவி. சரளா, செயலாளர். சாந்தி ரவி, முன்னாள் தலைவி. கீதாலட்சுமி, விஜயலட்சுமி பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள். பி. சொக்கலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
என் எஸ் எஸ் உதவி திட்ட அலுவலர் ஹரி கிருஷ்ணன், இன்னர் வீல் சங்க பொறுப்பாளர்கள். லதா,விஜி, விமலா, ராஜேஸ்வரி, விஜயலட்சுமி, சசிகலா மற்றும் முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள், பள்ளியின் அனைத்து ஆசிரிய பெருமக்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் அறிவியல் வினாடி வினா போட்டியில் முதலிடங்களை பிடித்த மாணவ செல்வங்களுக்கு சான்றிதழ்களையும் பரிசு பொருள்களையும் வழங்கி கௌரவித்தனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் எம் அருள் பிரகாசம் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக