மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட இடங்களை இரண்டு வாரங்களுக்குள் காலி செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு !!

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட சின்ன உடைப்பு பகுதி மக்கள், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தங்கள் இடங்களை காலி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சுமார் 350 குடும்பங்கள் வசித்து வரும் இந்தப் பகுதியில், நிலத்திற்கான இழப்பீடு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்ட போதிலும், முறையான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறி மக்கள் வெளியேற மறுத்து வந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, "அரசு ஏற்கனவே பெருங்குடியில் 2 செண்ட் நிலமும், 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடும் கட்டித் தர முன்வந்துள்ள நிலையில், மக்கள் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவது முறையல்ல" எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர். வரும் 15 நாட்களுக்குள் மக்கள் தாங்களாகவே முன்வந்து காலி செய்யாவிட்டால், சட்டப்படி பலத்தைப் பிரயோகித்து நிலத்தை அரசு தன்வசப்படுத்திக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!