தமிழக முதல்வர். மு.க.ஸ்டாலினின் 73-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் ரத்ததான முகாம்!!


விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான  இரா. லட்சுமணன் MLA அவர்கள் தொடங்கி வைத்து, ரத்ததானம் செய்தார். இதைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகள், இளைஞரணியினர் உள்ளிட்ட பலரும் ரத்ததானம் செய்தனர். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கிக் குழுவினர் முகாமில் கொடையாளர்களிடமிருந்து ரத்தத்தை தானமாக பெற்றனர்.

முகாமில் மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினர்கள். இரா.கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர். சம்பத், மாரிமுத்து, நகரச் செயலர்கள். எஸ். வெற்றிவேல், எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி, மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளர்.  செ.மணிண்டன், ஒன்றியச் செயலர்கள். பா.தெய்வசிகாமணி, வி.ஜி.பிரபாகரன், வளவனூர் பேரூர் செயலர் பா.ஜீவா, விழுப்புரம் நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கோலியனூர் ஒன்றியக்குழுத் தலைவர் இ.சச்சிதாநந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!