மதுரை ஃபாத்திமா கல்லூரியில் நடைபெற்ற 50வது பட்டமளிப்பு விழா!!

மதுரை மாவட்டம், மதுரையில் 28 பிப்ரவரி 2026 அன்று, மதுரை ஃபாத்திமா கல்லூரியின் 50வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர், மாண்புமிகு அருட்தந்தை ஜோ அருண் சே.ச. அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, பட்டப்படிப்பை முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். 

ஆணையத் தலைவர் அவர்கள் தம் சிறப்புரையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சார்பாகவும், சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பாகவும் கூடி வந்திருந்த அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்ததோடு, சிறுபான்மை மக்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கும் பாதுகாப்புகள், ஏராளமான நலத்திட்டங்கள் மற்றும் உரிமைகள் குறித்தும், ஆணையத்தின் செயல்பாடுகளை குறித்தும் விளக்கினார். மேலும், விடா முயற்சியும் நிலைத்தன்மையுமே நம்மை சிறந்து விளங்கச்செய்யும் என்று மாணவிகளுக்கு  எடுத்துக்கூறி, தம் வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். இந்த விழாவில், கல்லூரியின் முதல்வர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என சிறுபான்மையின மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!