அறந்தாங்கி அருகே நாகுடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்!!


அறந்தாங்கி தாலுகா நாகுடியில் திமுகவினர் சார்பில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில்  புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 51 ஜோடி மாடுகள்  போட்டியில் பங்கேற்றன.பெரிய மாடு, கரிச்சான்மாடு, பூஞ்சிட்டு என 3-பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் (9)ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் (14)ஜோடி மாடுகளும், தேன்சிட்டு மாடு பிரிவில் (27)ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டி சீறிப்பாய்ந்தன. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு 2லட்சம் மதிப்பிலான கோப்பைகள், ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப் பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சாலையில் இரு புறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தயத்தைக் கண்டு ரசித்தனர். நாகுடி  காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!