புதுக்கோட்டை - இலுப்பூர் அருகே மேட்டுச்சாலை பகுதியில் உள்ள மதர் தெரசா வேளாண்மை கல்லூரியில் நடைபெற்ற 2-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா!!
புதுக்கோட்டை மாவட்டம்: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே மேட்டுசாலை பகுதியில் செயல்பட்டு வரும் மதர் தெரசா வேளாண்மை கல்லூரியில் 27.02.2026 அன்று 2ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா காலை 11.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் செயல் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் முனைவர் கா. சுப்பிரமணியன் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு 100க்கும் அதிகமான மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்; மொரைஸ் குழும இயக்குநர் திருமதி சிசிலியா ஈடல் பிரியா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். விழாவில் நிறுவனர் முனைவர் இரா. சின்னத்தம்பி, தாளாளர் இரா.சி. உதயகுமார், இயக்குநர் முனைவர் மா. பூங்குன்றன், பதிவாளர் மு. தினேஷ்குமார் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சுப. இராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் ஒரு பகுதியாக மதர் தெரசா வேளாண் கல்லூரியின் பேராசிரியர்கள் பின்வரும் நூல்களை வெளியிட்டனர் “Processing and Value Addition of Fruits and Vegetables” (முனைவர் டி. சிவசக்தி), “Textbook of Plant Genetic Resources” (முனைவர் பி. ரம்யா), “காளான் வளர்ப்பு வளர்ப்பு” (திரு. எஸ். பிச்சைக்குமார்), “Textbook on Personality Development” (முனைவர் கா. மனோபாரதி) மற்றும் “Forests and Environment: An Ecological Perspective” (முனைவர் பா. சுகன்யா) மாணவர்களின் கல்விச் சாதனைகளை பாராட்டி Mother Teresa Gold Medal மொத்த GPA-யில் உயர்ந்த மதிப்பெண் பெற்ற திரு. பி. கனகமணிக்கு வழங்கப்பட்டது; Founder Dr. R. Chinnathambi Gold Medal Agronomy பிரிவில் உயர்ந்த GPA பெற்ற திரு. பி. கனகமணி மற்றும் செல்வி கே. அமீராவிற்கு வழங்கப்பட்டது; Dr. C.V.B. Gold Medal Plant Breeding & Genetics பிரிவில் உயர்ந்த GPA பெற்ற செல்வி பி. பவித்ரா மற்றும் செல்வி கே. அமீராவிற்கு வழங்கப்பட்டது; அதிக வருகை சதவீதம் பெற்றதற்காக திரு. பி. ராமகிருஷ்ணன் மற்றும் செல்வி எஸ். திவ்ய பாரதி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் ஆய்வுக் கட்டுரைகள் வெளியீடு, புத்தக வெளியீடு மற்றும் வெளிப்புற ஆய்வு நிதி பெற்றமைக்காக பேராசிரியர்கள் முனைவர்.ஜா.ஜோணி சுபாகர் ஐவின், முனைவர். டி. சங்கர், முனைவர். ஆர். செல்வம், முனைவர். பி. ரம்யா மற்றும் முனைவர். பா. சுகன்யா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தாளாளர். இரா.சி. உதயகுமார் அவர்கள் தலைமை விருந்தினருக்கும், கல்லூரி முதல்வர் முனைவர் சுப. இராமநாதன் அவர்கள் கௌரவ விருந்தினருக்கும் மற்றும் சிறப்பு அழைப்பாளருக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். மாணவர்கள் மற்றும் பெற்றோர் உற்சாகமாக கலந்து கொண்ட இந்த விழா, கல்வி மற்றும் ஆய்வு துறைகளில் கல்லூரி தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதை வெளிப்படுத்தியது.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக