தேனி அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகள் நடுதல் – நன்செய் அமைப்பின் பசுமை முயற்சி!!


தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில், நன்செய் அமைப்பு சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பசுமை செந்தில் அவர்களின் ஒருங்கிணைப்பில், தேனி அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மரக்கன்றுகள் நடும் இந்நிகழ்வில், இந்து எழுச்சி முன்னணி சார்பாக மாவட்ட செயலாளர் திரு இராமமூர்த்தி தேனி நகர தலைவர் திரு சிவராம் தேனி நகர செயலாளர் ஏழுமலையான் திரு சுரேஷ் நகர செயற்குழு உறுப்பினர் திரு இராஜேஷ்கண்ணன் ஆகியோர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

மருத்துவமனை வளாகம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், சுத்தமான காற்றையும் ஆரோக்கியமான சூழலையும் உருவாக்கும் முக்கியமான முயற்சியாகும். இது நோயாளிகளுக்கும் அவர்களை பார்க்க வரும் உறவினர்களுக்கும் நிம்மதியான இயற்கைச் சூழலை ஏற்படுத்தும். பசுமை வளர்ப்பு என்பது ஒரு சமூகப் பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இயற்கையை காக்கும் முயற்சியில் சமூக அமைப்புகளும் பொதுமக்களும் இணைந்து செயல்படுவது மிகவும் பாராட்டத்தக்கதாகும். இத்தகைய பசுமை முயற்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!