விழுப்புரம் வி.ஆர்.பி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 31-ம் ஆண்டு விழா!!


விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள வி.ஆர்.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 31-ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் மாலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சோழன் தலைமை தாங்கினார். ஆடிட்டர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கந்தசாமி அனைவரையும் வரவேற்றார். அரசு வக்கீல் நாகராஜன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, தேர்வில் ஒவ்வொரு வகுப்பிலும் முதலிடத்தை பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசு,சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

இவ்விழாவில் தாசில்தார் வேல்முருகன், நகரமன்ற கவுன்சிலர் கோதண்டராமன், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர் அன்பு, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பிருதிவிராஜ், மழலையர் பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி, வக்கீல் மனோ, நிர்வாகிகள் இருவேல்பட்டு குமார், மோகன், செல்வம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!