தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (பிப். 28) இரவு தமிழகம் வருகிறார். ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலப் பயணங்களை முடித்துக் கொண்டு, இன்று இரவு 9 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வரும் அவருக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கும் அவர், நாளை (மார்ச் 1) காலை 11.45 மணியளவில் புதுச்சேரி சென்று ரூ. 2,700 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மதியம் 3 மணியளவில் மதுரை வரும் பிரதமர், ரூ. 4,400 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்புத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதோடு, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். தேர்தல் நெருங்கும் வேளையில் பிரதமரின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!