மதுரை மக்களுக்கு தகன சேவை — நாகனாகுளத்தில் ஈஷா சார்பாக நவீன எரிவாயு தகனமேடை!!


மதுரை: மதுரை மாநகராட்சியின் சார்பில் மதுரை நாகனாகுளத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனமேடை, இனி  வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச தகன சேவையாக வழங்கப்பட உள்ளது. இந்த தகனமேடையின் பராமரிப்பு மற்றும் இயக்கப் பொறுப்பு, சமூக நல நோக்குடன் செயல்பட்டு வரும் ஈஷா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில், அனைத்து தரப்பு மக்களுக்கும் கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகள் மற்றும் எரியூட்டு சேவைகள் வழங்கும் உயரிய நோக்குடன், ஈஷா அறக்கட்டளை கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து தமிழகம் முழுவதும் பல மயானங்களை திறம்பட இயக்கி பராமரித்து பொதுமக்களிடையே நன்மதிப்பையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மதுரையிலும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈஷா தன்னார்வலர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. நகர்ப்புற மக்களின் நீண்ட நாள் தேவையை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பாரம்பரிய மர தகன முறைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நவீன எரிவாயு தகனமேடை, ஈஷா சார்பாக குருபூஜையுடன் தொடங்கப்பட்டது.

நாள்: 27.02.2026

இடம்: நாகனாகுளம் எரிவாயு மயானம்

(நாகனாகுளம் கண்மாய் அருகில், நாராயணபுரம், நியூ நத்தம் ரோடு, மதுரை) பொதுமக்களின் பாராட்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் அனைவருக்கும் இலவச தகன சேவை வழங்கப்படுவது, ஏழை எளிய மக்களுக்கு பெரும் ஆதரவாக அமைந்துள்ளது. மனிதநேயமும் சமூக பொறுப்பும் கலந்த இந்த சேவையை வழங்கிய ஈஷா  பவுண்டேஷனுக்கும் பொதுமக்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர். மதுரை மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த இந்த வசதி, இன்று நிஜமாகி இருப்பது சமூக சேவையின் சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!