குமுளி: திருடப்பட்ட 15 -க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்கள் மீட்பு !!

தேனி மாவட்டத்தில் குமுளி பகுதியில் காணாமல் போன மற்றும் திருடப்பட்ட செல்போன்களை காவல்துறையினர் திறம்பட விசாரணை மேற்கொண்டு மீட்டுள்ளனர்.

இதில் மொத்தம் 15 செல்போன்கள் மீட்கப்பட்டதாகவும், அவை தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி. அவர்களின் உத்தரவின்பேரில், குமுளி காவல் நிலையம் சார்பில் காவல் ஆய்வாளர் அபிலாஷ் குமார் தலைமையில் எஸ்.ஐ. கண்ணன், கான்ஸ்டபிள் மாரியப்பன், கான்ஸ்டபிள் விபின், கான்ஸ்டபிள் அஜித்குமார், கான்ஸ்டபிள் அருண் லால் உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் இந்த மொபைல்கள் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட செல்போன்கள் இன்று உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்டன.

காவல்துறையின் விரைவான மற்றும் சிறப்பான நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் செல்போன் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!