அரக்கோணம் அருகே இச்சிபுத்தூர், ஊ.ஒ.நடுநிலைப்பள்ளிக்கு MRF தொழிற்சாலை மூலம் நடைபெற்ற 2.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா!!

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஒன்றியம், இச்சிபுத்தூர், ஊ.ஒ.நடுநிலைப்பள்ளிக்கு MRF தொழிற்சாலை மூலம் 2.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய  வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது. 

இதை மாவட்ட ஆட்சியர். ஜெ.யு.சந்திரகலா IAS அவர்கள் ரிப்பன் வெட்டி வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் மரக்கன்று நடப்பட்டு, மாணவர்களுக்கு புத்தகப்பை உள்ளிட்ட பரிசு பொருட்கள் ஆட்சியரால் வழங்கப்பட்டன. 

விழாவில் இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மோகனா அவர்கள், மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர் சி.சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதில்,வட்டாரக் கல்வி   அலுவலர்கள் இரகுவீரன், கருணாமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர் பத்மநாபன் மற்றும் தலைமை ஆசிரியர் மு.கு.தேன்மொழி, ஆசிரியர் பெருமக்கள் இரா.துளசிராமன், கோ.புவனேஸ்வரி,க.சுஜாதா, கோ.அமுதா, பா.பாலமுருகன், அ.தேவராஜன், தணிகைமலை ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

விழா ஏற்பாடுகள் அனைத்தும் MRF நிறுவன பொதுமேலாளர் மற்றும் PRO கஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!