கே.வி குப்பம் அருகே மேல் காவனூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கு தொலைநோக்கி மூலம் வான் நோக்குதல் நிகழ்ச்சி!!


வேலூா் மாவட்டம் கே.வி. குப்பம் ஒன்றியம் மேல் காவனூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் வானில் நிகழ்வுகளை அரிய வான் நோக்குதல் நிகழ்வுகளை தொலை நோக்கி மூலம் மாணவர்கள் பொதுமக்கள் காணும் நிகழ்வுகளை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். சுரேஷ். தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி. கலந்து கொண்டு நிகழ்ச்சி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் தொடர்ந்து தொலைநோக்கி மூலம் வான் நோக்குதல் நிகழ்ச்சி அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள்  நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர் 

நிகழ்ச்சியில் பகல் 10 மணி முதல் மாலை 05 மணி வரை சூரியன் மற்றும் சூரியனின் கரும்புள்ளிகள் மாணவ மாணவிகளுக்கு பார்க்கப்பட்டது இரவு 07 மணி முதல் ஒன்றரை மணி வரை நிலவு வியாழன் சனி ஒரியன் நெபுல நட்சத்திரக் கூட்டம் மற்றும் பெரிய நட்சத்திரங்கள் கிரேட் பியர் துருவ நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் ரிஷப நட்சத்திர கூட்டம் என மாணவ மாணவிகள் என சுமார் 800க்கு மேற்பட்டோர்களுக்கு அப்பள்ளியின் வளாகத்தில் காண்பிக்கப்பட்டது. இதில் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலர் கண்டு களித்தனர் நிகழ்ச்சியில் மேல் காவனூர் ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் ஸ்ரீதர். மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலர் மது செழியன். வட்டார கல்வி அலுவலர்கள் சுமதி. சுடர்க்கொடி. தனி வட்டாட்சியர் ஆதிதிராவிட நல அலுவலர் வெங்கடேசன். பிஆர்சி மேற்பார்வையாளர் சிவக்குமார். கே.வி.குப்பம் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன். அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!