மன்னீஸ்வரர் அருந்தவ செல்வி தேர் திருவிழா!!

கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கர்நாடகா மற்றும் அவிநாசியை இணைக்கும் முக்கிய போக்குவரத்து மையமாக அன்னூர் உள்ளது; பழங்காலத்தில் மன்னீயூர் அல்லது அன்னியூர் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதிக்கு வளமான வரலாறு உண்டு மேலும் இங்குள்ள வன்னி மரத்தின் அடியில் கண்டெடுக்கப்பட்ட சுயம்புவாக உருவெடுத்ததாக கருதப்படுகிறது.

பழமையான, அன்னூர் மன்னீஸ்வரர் கோவில், 26ம் ஆண்டு தேர்த் திருவிழாவில், சின்னம்மன், பெரியம்மன் கோவிலில், கிராம தேவதை வழிபாடு நடந்தது. இரவு வாஸ்து சாந்தி, கிராம சாந்தி கோவிலில் நடந்தது. கணபதி ஹோமம் நடந்தது கொடிக்கம்பத்தில் நந்தி பகவான் உருவம் அச்சிடப்பட்ட வெள்ளை நிற கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தின் போது பக்தர்கள் மன்னீஸ்வரப் பெருமானுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து, அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர், கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். இதைத்தொடர்ந்து சுவாமி திருவீதி உலா, முக்கிய வீதிகளின் வழியாக நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், அறங்காவலர் குழு தலைவர். நடராஜன், அறங்காவலர்கள் மணி, யசோதா, சங்கர், பேரூராட்சி தலைவர். பரமேஸ்வரன், துணைத் தலைவர். விஜயகுமார் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.தினமும் இரவு வெவ்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. மடாதிபதிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!