நத்தம் வேணுகோபாலசாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!!

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் கோவில்பட்டி அக்ரஹாரத்தில் உள்ள வேணுகோபாலசாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை  காலை சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. 

இதையொட்டி சுவாமிக்கும், பாமா ருக்குமணி தேவியருக்கும் 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரம், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து கோயிலில் உள்ள விநாயகர், வாராஹி அம்மன், கருடாழ்வார், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. பின்னர் கோவிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நெய்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!