தேஞ்சிட்டு, பூஞ்சிட்டு ,தட்டான் சிட்டு,நடுமாடு, பெரிய மாடு மாட்டு வண்டி! எல்கைபந்தயம் !!

தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள கோட்டூரில் ஸ்ரீ கோபிநாதசுவாமி கோவில் வைகுண்ட ஏகாதேசி தேர் திருவிழா மற்றும் திமுக கழக மாண்புமிகு தமிழக துணை முதல்வர்.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. 

இந்த பந்தயத்தை பாராளுமன்ற உறுப்பினர்.எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் துவங்கி வைத்தார். மேலும் திமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த மாட்டு வண்டி பந்தயம் கோட்டூரில் இருந்து எட்டு கிலோமீட்டர் டொம்புச்சேரி வரை நடைபெற்றது இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஜோடி மாட்டு வண்டிகள் பங்கு கொண்டனர். மாட்டுவண்டி பந்தயத்தில் எல்கை நோக்கி சீறிப்பாயும் மாடுகளை உற்சாகப்படுத்தும் விதமாக சாலைஓரங்களில் இரு புறங்களிலும் உள்ள பார்வையாளர்கள் ஏராளமானோர் ஆரவாரப்படுத்தி உற்சாகப்படுத்தினார்கள் இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தட்டான் சிட்டு ,தேன்சிட்டு பூஞ்சிட்டு, நடுமாடு ,பெரிய மாடு என ஏழு பிரிவுகளில் 200க்கும் மேலான ஜோடி மாடுகள் கலந்து கொண்டனர் .இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் வெற்றி பெற்ற சாரதிகளுக்கும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!