குடியாத்தம் அடுத்த பரதராமி சோதனை சாவடி அருகே 75 கிலோ கஞ்சா பறிமுதல். இருவர் கைது!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு லாரியில் கடத்திவரப்பட்ட 75 கிலோ கஞ்சா பறிமுதல்- இருவரை கைது செய்து பரதராமி போலீசார் விசாரணை!

வேலூர் மாவட்டம், குடியாத்தம்,, ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆந்திர தமிழக எல்லையில் உள்ள பரதராமி சோதனை சாவடியில் பரதராமி போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த னர் அப்போது சரக்கு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த பொழுது அதில் 75 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது இதனையடுத்து 75கிலோ. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது35)மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 44) ஆகிய இருவரையும் கைது செய்தனர் மேலும் அவர்களிடம் மேற் கொண்ட விசாரணையில் ஒரிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து தமிழகத் தில் விற்பனை செய்வது தெரியவந்தது இதனையடுத்து இருவரையும் கைது செய்த பரதராமி போலீசார் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!