நத்தத்தில் பல்பொருள் அங்காடிக்குள் புகுந்த பாம்பு!!


திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அண்ணா நகரைச் சேர்ந்த சேக்முஜிபுர் ரகுமான் என்பவர் நத்தம் பேருந்து நிலையம் எதிரே(பல்பொருள்அங்காடிக்குள்)டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில், செவ்யாய்கிழமை அவரது கடைக்குள் ஒரு பாம்பு ஊர்ந்து சென்றது. இதைப் பார்த்த கடை ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

உடனடியாக நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து விரைந்து வந்த சிறப்பு நிலைய அலுவலர் அம்சராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், கடையில் பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்கில் பதுங்கியிருந்த பாம்பை சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின் உயிருடன் பிடித்தனர். பிடிபட்ட பாம்பு சுமார் 4 அடி நீளமுள்ள கொம்பேறிமூக்கன் இனத்தைச் சேர்ந்தது எனத் தெரியவந்தது. பின்னர், அப்பாம்பு நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!