ராணிப்பேட்டையில் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர். மோகன்ராஜ் , மாவட்ட செயலாளர். வைத்தியநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றிய மாநில செயலாளர். சுப்பிரமணியன் , கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர். சரவணன் , துப்புரவு பணி மேற்பார்வையாளர் சங்க மாநில பொதுச் செயலாளர். உமா சங்கர். ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் அரசு துறை அலுவலர்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் தூய்மை பணியாளர்கள் அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!