ஆவிச்சிபட்டி பகுதியில் உயிருடன் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு!!


திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள ஆவிச்சிபட்டி பாண்டியன் நகர் பகுதியில் உள்ள சின்னழகு என்பவருக்கு சொந்தமான புளியந்தோப்பில் மலைப் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதைக் கண்ட அப்பகுதியினர் நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு நிலைய  உதவி அலுவலர். அம்சராஜன் தலைமையிலான வீரர்கள் குழு சென்று ஊர்ந்து கொண்டு சென்ற மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினர் ஒப்படைத்தனர். அதை அவர்கள் கரந்தமலை மீது உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!