புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற புத்தாண்டை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஐமன் ஜமால் IPS அவர்கள் உத்தரவின் பேரில் 31-12-2025 மாலை முதல் 01-01 -2026 வரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . வழிபாட்டுத்தளங்கள் பேருந்து நிலையங்கள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பணி கவனம் செலுத்தி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டம் முழுவதும் குற்றங்களை தடுக்க நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள், நான்கு சக்கர ரோந்து வாகனங்கள், இரண்டு சக்கர ரோந்து வாகனங்கள் மூலமாக கண்காணிக்கப்படும். புத்தாண்டு அன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியவற்றினை தடுக்க மாவட்ட முழுவதும் 37 இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போக்குவரத்தை சீர் செய்ய போக்குவரத்து களை காவல் குழுவும். குற்ற நடவடிக்கைகளை படுக்க சாதாரண உடையில் காவல் குற்றப்பிரிவு பணிப்படையும், பாதுகாப்பு மற்றும் சட்ட விரோத செயல்கள் நடைபெறாத வண்ணம் ட்ரோண்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் இப் பாதுகாப்பு பணியில் 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 2 , துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளுநர்கள் என மொத்தமாக 641 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து "பைக் ரேஸ் " செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு செல்பவர்களின் பைக்குகளை பறிமுதல் செய்யப்படும் . அதேபோன்று சாலையில் செல்லும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் "வீலிங் "செய்வது அஜாக்கிரதையாகவும் அதி வேகமாகவும் செய்வதும் பொது இடங்களில் நின்று மது அருந்திவிட்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் இழிப்பவர்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் அனைவரும் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறைக்கு கொடுத்து மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மகிழ்ச்சியான முறையில் புத்தாண்டை கொண்டாட மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக