தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் 9ம் ஆண்டுநவரசவிழாமற்றும்சாதனையாளர்கள் விருது விழா!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை தலைமை இடமாகக் கொண்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தமிழ் படைப்பாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் 9ம் ஆண்டு நவரச விழா மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர். மோகன் தலைமை தாங்கினார். ஆலோசகர். ஆர். வெங்கட்டரமணன் வரவேற்றார். செயலாளர். சுந்தர்ராஜ் மற்றும் பொருளாளர் கேபிகே .பிரபாகரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் அரசவை கவிஞர். முத்துலிங்கம், நடிகர். கிங் காங். மற்றும் திருவண்ணாமலை சின்னராசு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர். தொடர்ந்து சாதனையாளர் விருதுகள் பெறும் பெண் மருத்துவர்கள். வாழவந்தாள் பன்னீர்செல்வம், நேத்ரா உமாபதி, மைதிலி பிரசன்னா, ஐஸ்வர்யா செல்வகுமரன் உள்ளிட்ட பலர் குத்து விளக்கேற்றினர்.
முதலில் சேவை செம்மல் விருதினை மருத்துவர். பன்னீர்செல்வம் மற்றும் வணிகர் சங்க தலைவர். கே. எம். தேவராஜ் பெற்றுக் கொண்டனர். ரோட்டரி சங்கத்தின் 51வது அணி தலைவர். மனோகர் பிரபு செயலாளர். லட்சுமிபதி பொருளாளர். ஒளிவண்ணன் ஆகியோர் பாராட்டு பெற்றனர். தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த சாதனையாளர் விருதுகளை பெறும் காவல் துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் ரமேஷ் பாபு டிகேபி .செல்வம் சதீஷ் பாபு கேசவன் நரசிம்மன் மாயக்கண்ணன் சாந்தா ஆதிகேசவன் கோ. ஏழுமலை, நால்வர் அணி சிவசுப்பிரமணி ராஜா, கமலக்கண்ணன், சரவணன், ஜனார்த்தனன், உள்ளிட்டோரும் சாதனையாளர் விருதுகளை பெற்றுக் கொண்டனர் விழா ஏற்பாடுகளில் அண்ணாமலை, கஜபதி, விக்னேஷ், ராமகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோர் ஈடுபட்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.




கருத்துகள்
கருத்துரையிடுக