கரூர் உயிரிழப்பு : சிபிஐ விசாரனை வேண்டும்அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் கோரிக்க!!

ராணிப்பேட்டை மாவட்டம்,யாரும் எதிர்பாராத நிலையில்கரூர் பொதுக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு சிபிஐ விசாரனை வேண்டும் எனஅகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ஐசக் அய்யா கோரிக்கை விடுத்தார் அவர் மேலும் கூறியதாவது...

கரூரில் நடைபெற்ற த.வெ.க தலைவர் பிரச்சாரக் கூட்டத்தில் 41 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளார்கள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது  பொறுத்துக் கொள்ளவும் முடியாத மிகப்பெரிய சோக சம்பவம் நடந்து விட்டது இது குறித்து பல நிலைகளிலே  அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் பொது மக்களும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இது மிகப்பெரிய சோகசம்பவம் இது ஆராய கூடியது எதற்காக  இப்படி இந்த நிகழ்வு நடந்தது. இத்தனை உயிர் எப்படி பலியானது என்பது குறித்து விசாரிக்க அவசியம் சிபிஐ விசாரணை தேவை சிபிஐ விசாரணை செய்தால் மட்டுமே முழு தகவல் கிடைக்கும் அதே நேரத்தில்  தவறு செய்துள்ளார்கள் யார் என்பது சிபிஐ விசாரணையில் தெரிந்துவிடும் ஆகையினால் அவசியம் சிபிஐ விசாரணை தேவை என்று அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் இது போன்ற மோசமான உயிர் இழப்பு நிகழ்வுகள் இனி நடைபெறாத வண்ணம் மாநில அரசு காவல்துறை அதிக கவனத்துடன் செயலாற்ற வேண்டும். என தனது கோரிக்கையில்  தேசிய தலைவர் டாக்டர். வி .எஸ். ஐசக் கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!