ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதன் முறையாக "Ranex 2025 Industrial & Trade Expo" தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி.. ஏற்பாட்டுக் குழு தகவல்!!

ராணிப்பேட்டைமாவட்டம்,ராணனிப்பேட்டை மாவட்டத்தில் முதன் முறையாக "Ranex 2025 Industrial & Trade Expo"  RANEX - 2025  என்ற பெயரில்  அக்.24  முதல்  26 வரை " தொழில்  மற்றும் வர்த்தக கண்காட்சி நடைபெற உள்ளதாக கண்காட்சி "    ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் முக்கிய தொழில் மையமாகத் திகழும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதன்  முறையாக RANEX - 2025  என்ற பெயரில் " தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி " அக்டோபர் 24  ஆம் தேதி முதல்  26 ஆம் தேதி வரை  3 நாள் நடைபெற உள்ளது.

இக்கண்காட்சி ஏற்பாட்டுக் குழு தலைவர். ஜெ.முரளி,சிட்கோ சங்க தலைவர். டி.ஏ.புனிதவேல்,  ஆலோசகர் கே.சந்திரஹாசன், பொருளாளர் யு.சண்முகநாதன், இணை  செயலாளர்.  டி.சி. சந்திரசேகர்,  இணை செயலாளர். ஆர்.தனசேகர்  ஆகியோர்  செய்தியாளர்களிடம்  தெரிவித்ததாவது... 

ராணிப்பேட்டை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் தலைமையில்,கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி,மாவட்ட ஆட்சியர். ஜெ.யு.சந்திரகலா IAS ஆகியோரின் வழிகாட்டுதலுடன்,தமிழக அரசின் அனைத்து தொழில் துறை அதிகாரிகளின்  ஆலோசனையின் பேரிலும்,மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடனும்,தேசிய மற்றும்  தனியார் வங்கிகளின் ஆரதவு மற்றும் இணைப்புடன் தொழில் வர்த்தகக் கண்காட்சி  நடைபெற  உள்ளது.

சர்வதேச உட்கட்டமைப்பு முழுமையாக குளிர்சாதன வசதியுடன் சுமார் 130 க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் குறு, சிறு மற்றும் நடுத்தர  உற்பத்தி,சேவைத் துறை நிறுவனங்கள்,தேசிய - சர்வதேச அளவிலான நிறுவனங்கள் தாங்கள் தயாரிப்பு மற்றும் சேவையை காட்சிப் படுத்தி வாங்குவோர், விற்போர் இடையே நேரடி சந்திப்பு, தொழில் துறை கருத்தரங்குகள், ஏற்றுமதி  வாய்ப்புகள், நிதி ஆதரவு ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது.

இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், கனடா,மலேசியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இருந்தும் முன்னனி தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் வழிகாட்டி  வல்லுநர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த கண்காட்சியில் பங்கேற்கும் உற்த்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு  அரசின் FaMeTN திட்டத்தின் கீழ் பங்கேற்பு செலவுகளை திருப்பித் தரப்படும் என்ற அரசின்  அறிவிப்பால் தொழில் நிறுவனங்களுக்கு அதிக ஊக்கமும், முதலீடும், வேலை வாய்ப்பும்  கிடைக்கப் பெற்று ராணிப்பேட்டை மாவட்ட தொழில் துறை ஒரு புதிய உயரத்திற்கு வளர்ச்சி பெறும் என தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!