தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தொகுதி II & IIA தேர்வினை கலெக்டர். சந்திரகலா IAS அவர்கள் பார்வையிட்டு ஆய்வு !!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். சந்திரகலா IAS அவர்கள் ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி , வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் தேர்தல்கள் (TNPSC ) குரூப் II ,IIA தேர்வு எழுதறதையும் மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்களுடன் தேர்வு எழுதுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இத் தேர்வானது ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் என தேர்வு மையங்களை 29 தேர்வு கூடங்களில் 7298 தேர்வர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில்5656 தேர்வர்கள் தேர்வு எழுதினார். 1642 தேர்வர்கள் பரிச்சை எழுத வரவில்லை. வருகை புரிந்தோர் சதவீதம் 77.50 சதவிகிதம் வருகை புரியாதோர் 22.50 சதவிகிதம் ஆகும்.
தேர்வு நடைபெறும் மையங்களை கண் காலத்தில2. துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் விடைத்தாள்களை கருவூலத்தில் பாதுகாப்பு வைப்பது எடுத்துச் சொல்வது உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைத்திட வாலாஜா ஆற்காடு மற்றும் அரக்கோணத்திற்கு ஆகிய வட்டத்திற்கு.2 வட்டாட்சியர்கள் ஒருங்கிணைப்பாளராகவும் சுற்று குழு (mobile team )9 வருவாய் துறை அலுவலர்களும் 29 வருவாய் துறை ஆய்வு அலுவலகங்களும் தேர்வு மைய நடைமுறைகளை கண் காணி திடவும் அனைத்து பணிகளும் வீடியோ பதிவுகள் செய்யும் பொருட்கள் மொத்தம் 31 வீடியோகிராபர்கள் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு மையங்களில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டது .இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக