கடலூரில் நடைபெற்ற சாம்பியின்ஷிப் போட்டி! ஜெயக்குமார் IPS பங்கேற்பு!!
கடலூர் மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் நண்பர்கள் கைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் கடலூர் மாவட்டம் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி 2025 2026 ஆண்டிற்கான ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டி நேற்று 27.9.2025 மற்றும் இன்று 28.9.2025 ஆகிய இரண்டு நாட்கள் பண்ருட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்கள் கோப்பைகள் வழங்கினார். பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் பரிசுத்தொகை வழங்கி வாழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர். ராஜா நகர மன்ற உறுப்பினர். சண்முகவள்ளி பழனி. கிருஷ்ணராஜ் . முன்னாள் நகர மன்ற உறுப்பினர். தர்ஷனா நகர தொழிலாளர் அணி அமைப்பாளர். ஜாகிர் உசேன் வார்டு செயலாளர். செல்வகுமார். கிருஷ்ணமூர்த்தி நகர இளைஞர் அணி அமைப்பாளர். சம்பத் துணை அமைப்பாளர். ராஜா கடலூர் மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் நண்பர்கள் கைப்பந்து கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.




கருத்துகள்
கருத்துரையிடுக