30 ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பில் இருந்த சுடுகாட்டு பாதை மீட்பு !!

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கூடலூர் பஞ்சாயத்துக்கூட்பட்ட கங்கை மோட்டுர் உள்ளது.இந்த கிராமத்தில். அருந்ததியர் சாதியினர் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் இவர்களுக்கு நீண்ட காலமாக சுடுகாட்டு பாதை இல்லாத காரணத்தினால் ஆதி திராவிட நலத்துறை சார்பில் நில எடுப்பு பணிநடைபெற்றுநிலஉரிமையாளர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே அவருடைய வங்கிக்கணக்கில்பணம்செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருவாய் துறையினர் சுடுகாட்டு பாதை அளவிட செய்யசெல்லும்போதெல்லாம்நிலஉரிமையாளர்கள்விஷம்அருந்தியும்மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டும் பிரச்சனை எழுப்பி வந்தனர்.இது ஒரு சவாலாகவே இருந்து வந்தது வருவாய்த் துறைக்கு!

இந்த நிலையில் இன்று மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை துணை ஆட்சியர். அறிவுடை நம்பி.தலைமையில் ஆதி திராவிட தனி துணை வட்டாட்சியர். இந்துமதி சோளிங்கர் வட்டாட்சியர். செல்வி ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கும்மேற்பட்டகாவலர்உதவிகளுடன் நில அளவீடு செய்ய சென்றனர். 

நிலத்தின் உரிமையாளர்கள் நடேசன் s/of அண்ணாமலை,விஜய். s/of சேட்டு சின்னதுரை.    s/of மக்கா ரெட்டி நாராயணசாமிs/of பெரியசாமி ரெட்டி ஆகியோர் நிலத்தை விடாமல் கரும்பு தோட்டங்கள் பூத்தோட்டங்கள் வைத்து ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.இதனை ஜேசிபி வர வைத்து காவலர்கள் துணையுடன் 

கங்கை மோட்டுர் அருந்ததி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட சுடுகாட்டுப் பாதையை கரும்பு தோட்டம், பூந்தோட்டம் உள்ளிட்ட இடத்தில் உள்ள  வேலியை அகற்றி அவர்களுக்கு வழி பாதை உண்டு செய்தனர்.

உடன் வட்டாரவளர்ச்சி அலுவலர்.சரவணன்,வருவாய் ஆய்வாளர்கள், நில அளவு ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள்,காவல்துறையினர் உடன் இருந்தார்கள்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!