சயனபுரம் முதல் பள்ளூர் வரை செல்லும் இணைப்புச் சாலையை விரைவில் தார்சாலையாக அமைத்து தரப்படும் பொதுமக்களிடம உறுதி அளித்த நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு!!

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், சயனபுரம் கிராமத்திலிருந்து பள்ளூர் கிராமம் வரை செல்லும் இணைப்பு சாலை, மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்துள்ளது. இந்த சாலையின் வழியாக விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு செல்வதற்கும், மருந்து மூட்டைகளை எடுத்து செல்வதற்கும், விளை பொருட்களை விற்பனைக்கு எடுத்து செல்வதற்கும், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அதேபோன்று திருமால்பூர் இரயில் நிலையம், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு போன்ற வெளியூர்களுக்கு சென்று வருவோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே பழுதடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்தது. இதுகுறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சாலையில் உள்ள மேடு பள்ளங்களை, மழைநீர் தேங்கியுள்ள இடங்களை கிரவல்மண் கொண்டு சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ. வடிவேலு அவர்கள் ஆய்வு செய்தார். அப்போது இந்த சாலையை, தார்சாலையாக அமைக்க, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர். காந்தி அவர்களிடமும், மாவட்ட ஆட்சித்தலைவர். சந்திரகலா IAS ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் தார்சாலையாக அமைப்பதற்கான முயற்சி எடுக்கப்படும் என்று விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் உறுதி அளித்தார்.

அப்போது, மாவட்ட விவசாயி தொழிலாளர் அணி துணை அமைப்பாளர். சயனபுரம் குமார், ஊர் நாட்டமைதாரர்கள் ஜெயவேல், கோவிந்தராஜி, சாமிநாதன், லட்சுமிபதி மற்றும் சயனபுரம் கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!