விஜய்க்கு மொத்தம் ரூ.520 கோடி சொத்து: வேட்புமனுவில் தகவல்!!

ரூ.520 கோடி தன்னுடைய வேட்புமனுவில் மொத்த சொத்து மதிப்பாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.

இதில் ரூ.404.58 கோடி அசையும் சொத்துகள் ரூ.115.13 கோடி அசையா சொத்துகள் எனக் கூறியுள்ளார்.

விஜயின் அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள் என குடும்பத்தில் அனைவருமே விஜய்க்கு கடனாளிகள்.

மனைவி சங்கீதாவுக்கு ரூ.12 கோடி, அப்பா சந்திரசேகருக்கு ரூ.3 கோடி, அம்மா ஷோபாவுக்கு ரூ.87 லட்சம், மகன் ஜேசனுக்கு ரூ.8 லட்சம், மகள் ஷாஷாவுக்கு ரூ.4 லட்சம் கடன் வழங்கியுள்ளார் விஜய்.

விஜய்யிடம் BMW 530, Toyoto Lexus 350, Toyoto vellfire, BMW 17, Maruti Swift, TVS XL SUPER என ரூ.7.52 கோடி மதிப்பிலான வாகனங்கள் உள்ளன. விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தகவல்.

சுமார் ரூ.3.44 கோடி வருவாய் தொடர்பாக 4 வருமான வரி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக வேட்புமனுவில் விஜய் தகவல்.

சுமார் ரூ.1.64 கோடி மதிப்பிலான கடன் பொறுப்புகள் தகராறில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் ரூ.1.20 கோடி மதிப்பிலான தங்கம், ரூ.15 லட்சம் மதிப்பிலான வெள்ளி, மனைவி சங்கீதாவிடம் ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம், ரூ. 1 கோடி மதிப்பிலான வைரம் உள்ளதாக தெரிவித்துள்ளார் விஜய்.

நடிப்பை தாண்டி ரியல் எஸ்டேட் அதிபராகவும் உள்ளார் விஜய். ஜெயா நகர் ப்ராபர்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ளதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்க்கு நீலாங்கரை - 1, ஊரூர் - 1, மயிலாப்பூர் - 1, பள்ளிப்பட்டு - 1, படூர் - 1, கொரட்டூர் - 1, சாலிகிராமம் - 2, சோழிங்கநல்லூர் - 2 என மொத்தம் 10 வீடுகள் உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!