நத்தம் அருகே சமுத்திராப் பட்டியில் நடைபெற்ற மந்தை பகவதி அம்மன் கோயில் திருவிழா!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சமுத்திராப்பட்டியில் உள்ள மந்தை பகவதி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு அங்குள்ள ஊரணியிலிருந்து கரகம் அலங்கரிக்கப்பட்டு அம்மன் சர்வ அலங்காரத்தில் மேளதாளம் முழங்க அதிர் வேட்டுகளுடன் கோயிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தனர். திங்கட்கிழமை  காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து அக்னிச்சட்டி, பால்குடம் போன்றவைகள் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு அம்மன் சர்வ அலங்காரத்தில் மேளதாளம் முழங்க,  வர்ணக்குடை, அதிர்வேட்டுகளுடன் மின்ரதத்தில் ஊர்வலமாக சென்று இருப்பிடம் போய் சேர்ந்தது. இதில் சடையம்பட்டி, நத்தம், சம்பைப் பட்டி, ஏரக்காபட்டி, அம்மாபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த பத்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சமுத்திராப் பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!