கோவை ரோட்டரி கிளப் ஆப் பெரியநாயக்கன்பாளையம் நார்த் எனும் க்ளப் தொடக்கம் புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு!!

கோவை மாவட்டம்,ரோட்டரி கிளப் ஆப் பெரியநாயக்கன்பாளையம் நார்த், ஆர். ஐ மாவட்டம் 3203 சார்டர் இன்ஸ்டாலேஷன் விழா கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த ஜோதிபுரம் பகுதியில் உள்ள கே. வி. என். மஹாலில் நடைபெற்றது.

ரோட்டரி கிளப் ஆப் காரமடை ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தும், மணி அடித்தும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஸ்பான்சர் கிளப் ரோட்டரி கிளப் ஆப் காரமடை தலைவர் ரோட்டேரியன் எம்.பி.ஹெச்.எப் குமணன் நடராஜன் வரவேற்புரை வழங்கினார்.

தொடர்ந்து புதிதாக தொடங்கப்பட்ட ரோட்டரி கிளப் ஆப் பெரியநாயக்கன்பாளையம் நார்த் கிளப்பில் இணைந்த உறுப்பினர்களுக்கு பதவியேற்பு சத்தியப்பிரமாணத்தை அசிஸ்டண்ட் கவர்னர் ரோட்டேரியன் விஜய் பிரபு நடத்தி வைத்தார். அதையடுத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் ரோட்டரி கிளப் பேட்ஜ் அணிவிக்கப்பட்டு உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். இதில் ரோட்டரி கிளப் ஆப் பெரியநாயக்கன்பாளையம் நார்த் சார்ட்டர் தலைவராக ரோட்டேரியன் முகமது ஹனீஃப், சார்ட்டர் செயலாளராக ரோட்டேரியன் ராஜசேகர், சார்ட்டர் பொருளாளராக ரோட்டேரியன் ரவிகுமார் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டு, ஆனைகட்டியில் செயல்பட்டு வரும் மலைவாழ் மக்கள் உண்டு உறைவிடப் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்களை புதியதாக தொடங்கப்பட்ட ரோட்டரி கிளப் ஆப் பெரியநாயக்கன்பாளையம் நார்த் நிர்வாகிகள் வழங்கினர். 

இந்நிகழ்ச்சியில், 3203 மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் தனசேகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரோட்டேரியன் லோகநாதன், திருப்பூர் நியூ கிளப் புரமோஷன் சேர் ரோட்டேரியன் வேலுசாமி மற்றும் மாவட்ட உறுப்பினர் சேர்க்கை சேர் ரோட்டேரியன் சுரேந்திரன், நியூ கிளப் ஆலோசகர் ரோட்டேரியன் சிவசதீஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!