நத்தம் அருகே உலுப்பகுடியில் வேட்டைக்காரன் சுவாமி கோயில் விழா! ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கறிவிருந்து நிகழ்ச்சி!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள உலுப்பகுடியில் வேட்டைக்காரன் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழாவையொட்டி ஆண்டு தோறும் இங்குள்ள தெற்குத் தெரு பகுதி மற்றும் வடக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர்களில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு கறிவிருந்து சமையல் செய்து அன்னதானம் நடைபெறும். 

இதில் சுற்றுவட்டார பகுதிகளான புன்னப்பட்டி, காட்டுவேலம்பட்டி, குட்டூர், வேலாயுதம் பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் ஆண்கள் வரிசையில் வந்து நின்று கறிவிருந்து அன்னதானத்தை தங்கள் பாத்திரங்களில் வாங்கிச் சென்று வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் உண்டு மகிழ்வர். இதையொட்டி கடந்த 23-ஆம் தேதி இரவு உலுப்பகுடி தெற்குத் தெரு பகுதியைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு கறிவிருந்து சமையல் செய்து அன்னதானம் நடந்தது. இதைப்போலவே வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு 50 கிடாய்கள் வெட்டி 50 சிப்பம் அரிசியில் கம, கம கறிவிருந்து திங்கட்கிழமை இரவு முதல் விடிய விடிய தயார் செய்து அங்குள்ள வேட்டைக்காரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்ததையொட்டி சாமிக்கு படையலிட்டு செவ்வாய்கிழமை  அதிகாலை அன்னதானத்தை தொடங்கினர். இதில் சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாங்கிச் சென்று குடும்பத்துடன் வைத்து உண்டு மகிழ்ந்தனர்.

குறிப்பு: கோயில் உள்ள பகுதியிலும் சமையல் கறிவிருந்து தயார் செய்யும் பகுதியிலும் பெண்கள் சிறு குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை அதில் கலந்து கொள்ள மாட்டார்கள். இது பாரம்பரியமாக கடைப்பிடித்து வரும் நடைமுறையாக இன்று வரை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!