ஏப்ரல் 1 முதல் E20 பெட்ரோல்!!

ஏப்ரல் 1 2026 முதல் E20 பெட்ரோல் விநியோகிக்கப்படும்.E என்பது எத்தனால். எத்தனால் என்பது சர்க்கரை கரும்பு மக்காச்சோளம் இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை எரிபொருள். 80 சதவீதம் பெட்ரோலும் 20 சதவீதம் எத்தனாலும் கலந்த கலவையை இனி உபயோகத்திற்கு வரும். E10 வகை பெட்ரோல் உபயோகத்தில் இருந்தது.

 E20 பெட்ரோல் RON 95 என்ற தரத்தில் இருக்கும். RON என்றால் ரிசர்ச் ஆக்டேன் நம்பர் என்பதாகும் பெட்ரோலின் தரத்தை அளக்கும் அளவீடு தான் இது. RON 91 என்பது சாதாரண பெட்ரோல். RON 95 என்பது தரத்தில் உயர்ந்த பெட்ரோல். RON அளவு அதிகமாக இருந்தால்தான் இன்ஜினில் knocking குறைவாக இருக்கும். Knocking  என்றால் என்ஜினுக்குள் எரிபொருள் முறையாக எரியாமல் இருந்தால் உருவாகும் சத்தம் தான் அது.இந்த சத்தம் வர காரணம் என்ஜின்  அதிக வெப்பமடைவதாலும் குறைவான எரிபொருள் பயன்பாட்டாலும் உருவாகிறது. RON அளவு அதிகமாக இருந்தால் சிறந்தது. இந்த E20 பெட்ரோல் பயன்பாட்டுக்கு வர காரணம் 

1, வெளிநாட்டு எண்ணெய் இறக்குமதியை குறைக்க 

2, சுற்றுச்சூழல் மாசுபாடு குறைக்க

3, உள்நாட்டு விவசாயிகளுக்கு ஆதரவு 

(எத்தனால் தயாரிக்க கரும்பு மக்காச்சோளம் தேவை அதிகரிக்கும் )

 சரி வாகனங்களுக்கு E20 பெட்ரோல் நல்லதா என பார்ப்போம்.

 2023 க்கு பிறகு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு சிறப்புடையது ஏனெனில் E20 பெட்ரோலை ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் எஞ்சின்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும்  2016 முதல் 2022 காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட கார்கள் E20 பெட்ரோல் பயன்பாட்டால் மைலேஜ் குறைய வாய்ப்புள்ளது எஞ்சின் பாகங்கள் எரிபொருள் குழாய் கேஸ் கட் போன்றவை சற்று பாதிக்க வாய்ப்புள்ளது எரிபொருள் பம்ப் இன்ஜெக்டர் எரிபொருள் பில்டர் போன்றவற்றை சரியாக பராமரிப்பு செய்தால் பிரச்சனை எதுவும் இல்லை. உங்கள் கார் E20 பெட்ரோலுக்கு ஏற்ற  காரா என தெரிந்துகொள்ள எரிபொருள்  மூடியில் E10 அல்லது E20 என குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லது கார் வாங்கும் போது கொடுக்கப்பட்ட user manual புத்தகத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் அல்லது  servive centre க்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம். மொத்தத்தில் E20 பெட்ரோல் உபயோகிக்கும் போது வாகனத்தை சரியான கால இடைவெளியில் பராமரிப்பு செய்து உபயோகித்தால் சிறப்பானது.

சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!