சண்சரண் சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா!!

மதுரை :  சண்சரண் சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் “முப்பெரும் விழா” முன்னிட்டு 20 புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டில் 9 மாதங்களில் எழுதப்பட்ட 20 புதிய சாதனை நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் பாடநூல், இதழ் மற்றும் கல்வியியல் நிறுவனங்களில் பணியாற்றிய முனைவர் சண்முகதிருக்குமரனின் நூல்கள் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியில்,  மாணவர்கள், வானொலி தொகுப்பு விரிவுகள் மற்றும் இதயம் கவர்ந்த கவிதைகள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் வெளியிடப்பட்டன.

மேலும், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சி   டாக்டர் பி.எஸ். ராகேந்திரன் தலைமை தாங்கினார். தொடர்ந்து, தேவகி மருந்துவமனை மற்றும் மதுரை சார்ந்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்வில், மாண்புமிகு  நீதியரசர் திரு. எஸ். விமலா அவர்கள் முன்னிலை வகித்தார். மௌனத்தை முறியடித்த மலர்கள் என்ற தலைப்பில் மனிதநேய மாமணி *ஸ்டார் குருசாமி* அவர்கள் எழுச்சி உரையாற்றினார் மேலும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுவாமிதுரை, வளர்மதி அறக்கட்டளை ராணி ஆகியோர் கலந்து கொண்டனர். 

பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு சண் சரண் தங்கமகள் விருது வழங்கி கௌரவித்தனர். 

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விருதுகள் பெற்று மகிழ்ந்தனர் நட்சத்திர நண்பர்கள் குருசாமி அவர்களின் சமூக செயல்பாட்டை வந்திருந்த விருந்தினர்களும் பொதுமக்களும் பாராட்டி மகிழ்ந்தனர்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!