ராணிப்பேட்டையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரி பார்க்கும் கருவிகளின் செயல்முறை விளக்கம் குறித்த விழிப்புணர்வு!!
இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவி ஆகியவற்றின் முதல் நிலை சரிபார்ப்பு முடிந்த பின்னர், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 06.01.2026 அன்று (செவ்வாய்க் கிழமை) 88 கட்டுப்பாட்டுக் கருவிகள், 88 வாக்குப்பதிவுக் கருவிகள் மற்றும் 88 வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் (மொத்தம் 264) ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன.
பயிற்சி மற்றும் விழிப்புணர்விற்காக எடுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் பட்டியலும் அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டிக் குறிப்புகளின்படி, பயிற்சி மற்றும் விழிப்புணர்விற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்கள் தலா 20 என்ற எண்ணிக்கையில் அந்தந்த சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலங்களில் (வட்டாட்சியர் அலுவலகங்கள்) வைக்கப்பட்டுள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் செயல்முறை விளக்கத்தை அளிப்பதற்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்க மையங்கள் (EVM Demonstration Centre) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலங்களில் (அரக்கோணம் மற்றும் இராணிப்பேட்டை) அமைக்கப்பட்டுள்ளன. (EDC நீங்கலாக, அனைத்து வாக்குச் சாவடி) பகுதிகளைச்/தொகுதிகளைச் சென்றடையும் வகையில், விழிப்புணர்வு நோக்கத்திற்காக 4 (தொகுதிக்கு ஒன்று) நடமாடும் செயல்விளக்க வாகனங்கள் (Moblie Demonstration Van) பயன்படுத்தப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் செயல்முறை விளக்கம் குறித்த விழிப்புணர்வு, இந்தியத் தேர்தல் ஆணையம், தேர்தலை அறிவிக்கும் வரையில் தொடர்ந்து நடத்தப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக