சின்ன மோசூரில் தையல் பயிற்சி முடித்த 30 கிராம பெண்களுக்கு சான்றிதழ்கள் டாக்டர். ராஜசேகரன் வழங்கினார்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் அடுத்த மோசூர் ஊராட்சி சின்ன மோசூர் கிராமத்தில் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்று வழங்கும் விழா நடைபெற்றது தமிழ்நாடு வறுமை கோட்டு கீழ் உள்ள  மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு தையல் பயிற்சி அளிக்கபட்டது. ஆகவே பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவிற்கு  அறக்கட்டளை நிறுவனரும் தமிழ் குடி உழவர் உற்பத்தியாளர் சங்க சேர்மனும், நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவரும், மனித உரிமை தொழிற்சங்க மாநில தலைவருமான டாக்டர். கே.ராஜசேகரன் தலைமை தாங்கி சான்றுகள் வழங்கினார்

மேலும் அறக்கட்டளை பொதுச் செயலாளர். விமலா பழனிவேல் ஆகியோரும் சான்றுகளை வழங்கினார்.  அறக்கட்டளை இயக்குனர்கள் டாக்டர். அந்தோணிசாமி வேணுகோபால் மோகன் பாபு சதீஷ்குமார் சந்தோஷ் குமார்  மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட சிறுபான்மை பிரிவு நலக்குழு உறுப்பினர். ஜி .கே. பார்த்திபன்

காங்கிரஸ் பிரமுகர். மோசூர் ராஜேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக.கலந்து கொண்டனர்  விழாவில் மகளிர் குழு உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர் தையல் பயிற்சியாளர். தேவி நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!