ராணிப்பேட்டையில் முதலமைச்சர், இளைஞர் விளையாட்டு திருவிழா! இது நம்ம ஆட்டம் 2026 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் முதலமைச்சர், இளைஞர் விளையாட்டு திருவிழா – இது நம்ம ஆட்டம் 2026 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் இன்று (31.1.2026) வாலாஜா வன்னிவேடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இராணிப்பேட்டை மாவட்ட பிரிவின் சார்பாக முதலமைச்சர், இளைஞர் விளையாட்டு திருவிழா – இது நம்ம ஆட்டம் 2026 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்து வீரர்களுடன் கபடி விளையாடினார்.
மேலும் கேலோ இந்தியா கையுந்துபந்து மையத்தின் 30 மாணவிகள் மற்றும் ஸ்டார் குத்துச்சண்டை அகாடமி 40 மாணவ மாணவிகள் மொத்தம் 70 மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.5 இலட்சத்திற்கான மருத்துவக் காப்பீடு அட்டைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார்.
ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
திமிரி. ஆற்காடு, வாலாஜா, காவேரிப்பாக்கம், நெமிலி, அரக்கோணம். சோளிங்கர் ஆகிய வட்டாரங்களில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற ஆண்களுக்கு மாவட்ட அளவில் தடகளம் (100மீ (ம) குண்டெறிதல்). கபடி, கையுந்துபந்து, கேரம் இரட்டையர், கயிறு இழுத்தல் போட்டி, ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்கள் மட்டும்) ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன.
மேலும் 01.02.2026 அன்று பெண்களுக்கான போட்டிகளும் நேரடி மாவட்ட அளவில் ஓவியம், கோலப்போட்டிகள் மற்றும் உடல்சார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும். பார்வைசார் மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல் போட்டியும், அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும் அதேபோன்று செவிசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும் என மாற்றுத்திறனாளிகளுகக்கு 4 பிரிவுகளாகவும் போட்டிகள் நடைபெறுகின்றன.
மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.6000/-, இரண்டாம் பரிசு ரூ.4000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- வழங்கப்படுகிறது. இன்று நடைபெற்ற போட்டிகளில் 245 ஆண்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அனைவருக்கும் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசேகரன் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக