தேனி இடுக்கி சுரங்கப்பாதை திட்டம் கேரள பட்ஜெட்டில் ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு!!
கேரளா :இடுக்கி மாவட்டத்தின் கனவு திட்டமான கட்டப்பனை கம்பம் சுரங்கப்பாதை திட்டத்தின் சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல் கட்டமாக ரூபாய் பத்து கோடி நிதி ஒதுக்கீடு இந்தத் திட்டத்தின் மொத்த திட்ட மதிப்பு ரூபாய் 1 ,182 ,43 கோடி ஆகும் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளில் கம்பத்தில் இருந்து கட்டப்பனை செல்ல 40 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணம் செய்ய சுமார் 90 நிமிடங்கள் ஆகும் ஆனால் இந்த மலைகளுக்கு இடையே அமைக்கப்படும் சுரங்கப்பாதையில் 12 முதல் 15 கிலோமீட்டர் தொலைவாக குறைந்து 30 நிமிடங்களில் சென்றுவிடலாம் தமிழகம் கேரளத்தைச் சேர்ந்த வனத்துறையினர் மத்திய மாநில அரசுகள் பொறியாளர்கள் நிபுணர்கள் மூலமாக ஆய்வு செய்யப்படும் மலையை குடைந்து அமைக்கும் இந்த பணியால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை இடுக்கி அணைகள் வனவிலங்குகள் இயற்கை சுற்றுச்சூழல் உள்ளிட்டவைகளை ஏதேனும் பாதிப்புகள் இருக்குமா என்ற நோக்கில் முதல் கட்டமாக ஆய்வு பணிகள் நடைபெற உள்ளன.
இந்தச் சுரங்கப்பாதை திட்டம் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தின் நீண்டகால கனவுத் திட்டமாக கருதப்படுகிறது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக