நத்தம் சமுத்திரா பட்டியில் தவெக சார்பில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

திண்டுக்கல் மாவட்டம்,தமிழக வெற்றிக் கழகம் திண்டுக்கல் தெற்கு மாவட்டம், நத்தம் மத்திய ஒன்றியம் சார்பில் வேலம்பட்டி, ஆவிச்சிப்பட்டி, சமுத்திராபட்டி, பூதகுடி, ஆகிய ஊராட்சிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, கழிவு நீர் வாய்க்கால் வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை செய்து தர கோரி தமிழக அரசையும் ஊராட்சி நிர்வாகங்களை வலியுறுத்தி சமுத்திராபட்டியில் திண்டுக்கல் தெற்கு மாவட்ட கழக செயலாளர்.S.M.நிர்மல்குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திண்டுக்கல் தெற்கு மாவட்ட கழக செயலாளர்மற்றும்நிர்வாகிகள்.க.சீத்தாராமன்,க.வினோத்குமார், ச.அருள்பாண்டி, ந.பிச்சைமணி, க.கதிரவன் த.செந்தில்குமார், பெ.பாசத்தவம், ச.சுரேஷ், பூமிராஜன், பாரிதாசன், த.பாலகுரு, து.பொன்னன், பூமிநாதன், ராஜேஸ்வரி.

தமிழக வெற்றிக் கழக தெற்கு மாவட்ட நிர்வாகிகள், நத்தம் நகரம் நிர்வாகிகள், நத்தம் அனைத்து ஒன்றிய நிர்வாகிகள், சாணார்பட்டி அனைத்து ஒன்றிய நிர்வாகிகள் திண்டுக்கல் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!