ராணிப்பேட்டையில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் அமைச்சர் வழங்கினார்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் 5,781 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கினார்கள்.
கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இன்று (31.01.2026) “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் மேல்விஷாரம் MMES மகளிர் கலைக் கல்லூரியில் இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும்-2,917 மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கியும், ஆற்காடு மகாலட்சுமி மகளிர் கலைக் கல்லூரியில் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும்-1,465 மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கியும், அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும்-1,180 மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கியும், கல்பட்டு பாரதிவேலு கலைக் கல்லூரியில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் -219 மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கியும், இராணிப்பேட்டை மாவட்டத்தில் 22 அரசு 11 அரசு நிதி உதவி பெறும் மற்றும் 11 தனியார் கல்லுரிகளில் பயிலும் மாணாக்கர்கள் என மொத்தமாக 5,781 மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினர்கள்.
ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர். ஜெ.எல்.ஈஸ்வரப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
உலகம் உங்கள் கையில் என்பது தமிழ்நாடு அரசின் முன்னோடி (Flagship) திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டு அவர்களின் டிஜிட்டல் கல்வி திறன்களை மேம்படுத்துவது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களான மாணவர்களிடையே டிஜிட்டல் அறிவுத் திறன் மற்றும் கணினி பயன்பாட்டு திறனை மேம்படுத்துதல், ஆன்லைன் கல்வி, மின்னணு கற்றல் (eLearning) ஆய்வு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு ஆதரவு வழங்குதல், குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களிடையே உள்ளடிஜிட்டல் இடைவெளியை குறைத்தல், கல்வித் திறன் மற்றும் வேலைவாய்ப்பு திறனை உயர்த்துதல், உயர்கல்வி மற்றும் நவீன வேலைவாய்ப்பு சந்தைக்கு மாணவர்களைத் தயார்படுத்துதல், தொழில்நுட்ப வசதிகளுக்கும் உலகளாவிய அறிவு வளங்களுக்கும் எளிதாக அணுகலை வழங்குவதன் மூலம், இந்தத் திட்டம் அதன் பெயருக்கேற்ப உலகம் உங்கள் கையில் என்ற கருத்தை உண்மையாக்குகிறது.
இந்நிகழ்ச்சிகளில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை. அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் பேசியதாவது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் அழைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார் கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவ மாணவியர்களின் கற்றல் இடைவெளியை போக்கிடும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டது இதன் மூலம் ஏராளமான மாணவ மாணவியர்கள் பயனடைந்தனர் அதேபோன்று வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு காலை உணவு செய்து தர முடியாது என்பதை தாய் உள்ளத்தோடு அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை செயல்படுத்தினார் இத்திட்டத்தின் மூலம் தினந்தோறும் காலை உணவை சாப்பிட்டு குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.
அதேபோன்று உயர்கல்வினை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களின் மூலம் மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது இத்திட்டங்களின் மூலம் கிட்டத்தட்ட 13,000 மாணவ மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் அதில் குறிப்பாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார் ஏனென்றால் ஒரு குடும்பத்தை நிர்வகிக்கின்ற பொறுப்பு ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிகம் அவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையானது தேவையற்ற செலவுகளுக்கு செல்லாமல் குடும்பத்திற்கான செலவுகளுக்கு மட்டும் பயன்படும் அதற்காகத்தான் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்புகள் நிறுவப்பட்டுள்ளது தனியார் பள்ளிகளுக்கு காட்டிலும் அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து காணப்படுகிறது.
மடி கணினி பெரும் மாணவ மாணவிகள் வாழ்க்கையில் குறிக்கோளோடு இருக்க வேண்டும் விடாமுயற்சியுடன் வாழ்க்கையில் நன்றாக படித்து முன்னேற வேண்டும் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் பொழுது என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் பெற்றோர் கனவுகளை நினைவாக்கும் வகையில் பெற்றோர்களை மறக்காமல் கைவிடாமலும் அவர்கள் உங்களை நல்ல நிலைமைக்கு முன்னேற்ற வேண்டும் என்று ஏழை எளிய தாய்மார்கள் கனவுகளோடு பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள் அவர்களுடைய எண்ணத்தை ஆசையை நிறைவேற்றும் வகையில் மாணவானவர்கள் படித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கும் இது போன்ற திட்டங்களை பயன்படுத்தி எதிர்காலத்தில் சிறக்க வேண்டும் என வாழ்த்தி பேசினார்.
இந்நிகழ்ச்சிகளில் திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் செந்தில்குமரன், ஒன்றிய குழுத்தலைவர்கள். புவனேஸ்வரி சத்தியநாதன்,அசோக், நிர்மலா சௌந்தர், வடிவேலு, அ.கலைக்குமார், நகர மன்ற தலைவர்கள் லக்ஷ்மி பாரி, ஹரிணி தில்லை, குல்சார் அஹமத், தமிழ்ச்செல்வி அசோகன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர். நாகராஜு, ஒன்றிய குழு துணை தலைவர் ரமேஷ், ஸ்ரீமதி நந்தகுமார், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமம் நிறுவனர் சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அம்பிகா பாபு, தன்ராஜ், கல்லூரி முதல்வர். ஜெகநாதன், கல்லூரி முதல்வர் .கிஷன் குமார், துணை முதல்வர் முனைவர். தேன்மொழி, முதல்வர் டாக்டர்.பிரடன் ஜான் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக