நெகிழி இல்லா குற்றாலமாக மாற்றிட குற்றாலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்!!

தென்காசி மாவட்டம், இயற்கை சுற்றுலாத்தலமான குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான கலைவாணர் கலையரங்கத்தில் வைத்து இன்று சனிக்கிழமை 31-1-2026 இன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் குற்றாலம் காவல்துறை மற்றும்

வனசரவர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் மற்றும் குற்றால பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் சுற்றுலாத்தலமான குற்றாலத்தினை நெகிழி இல்லா குற்றாலமாக மாற்றிட குற்றாலம் பகுதிகளில் கடை நடத்திவரும் கடை உரிமையாளர்கள் தங்கும் விடுதி உரிமையாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களை தடை செய்யவும் அதற்கு மாற்றான பொருட்களை பயன்படுத்திடவும் தெரிவிக்கப்பட்டது மேலும் குற்றாலம் பகுதிகளில் 500 மில்லி ஒரு லிட்டர் மற்றும் 2 லி குடிநீர் பாட்டில் மற்றும் குளிர்பான பாட்டில்கள் பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டது தேநீர் கடைகளில் கண்ணாடி குவளை மற்றும் சில்வர் டம்லர் பயன்படுத்தும் தெரிவிக்கப்பட்டது குற்றாலம் அருவியில்உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சோப்பு ஷாம்பு பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. மேலும் குற்றாலத்தில் உள்ள கடைகளில் நெகிழி பொருட்கள் இருப்பு வைத்தல் வியாபாரம் செய்தல் மற்றும் பயன்படுத்தல் உரிய அபராதம் விதிக்க பேரூராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது  குற்றாலத்தினை பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான கன்னியாகுமரி மற்றும் உதகமண்டலம் போன்ற பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாத்திடும் பொருட்டு வெளியூரிலிருந்து குற்றாலத்தில் வரும் சுற்றுலா பயணிகள் நுழைவுப் பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து சுற்றுலா சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வந்தால் அவற்றை பறிமுதல் செய்து தெரிவிக்கப்பட்டது மார்ச் 1ஆம் தேதி முதல் குற்றாலம் பேரூராட்சி ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லாத நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கப்பட்டது கூட்டத்தில் குற்றாலம் பேரூராட்சி பகுதி கடை வியாபாரிகள் தங்கும் விடுதி உரிமையாளர்கள் ஆட்டோ ஓட்டுநர் பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!