கடலூர் கல்லூரி பெண்கள் மனதில் இடம் பிடித்த புதுநகர் காவல் ஆய்வாளர். பிரசன்னா!!

கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் பிரசன்னா   

கடலூர் காவல் கண்காணிப்பாளர். எஸ். ஜெயக்குமார் உத்தரவின் பேரில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடலூர் காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கடலூர் புது நகர் பொதுமக்கள்  மிகவும் இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர் இதற்கு முக்கிய காரணம் புதுநகர் காவல்துறை என்று கூறலாம் ஒரு காவல்துறை ஆய்வாளருக்கு குற்றப் புலனாய்வு (Investigation), சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, FIR பதிவு செய்தல், ரோந்துப் பணி, தலைமைக் காவலர்களைக் கண்காணித்தல் மற்றும் காவல் நிலையப் பதிவேடுகளைப் பராமரித்தல் என் கடும் பணிகளை மேற்கொண்டு வந்தாலும். அவ்வப்போது  ரோந்து பணியிலும் தன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் கண்காணிக்கும் பொறுப்பையும் துல்லியமாக பிரசன்னா மேற்கொண்டு வருகிறார்.

ஒரு மணி நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் புதுநகர் ஆய்வாளர் பிரசன்னா சூறாவளியாக சுழலுவதை நமது வெட்ட வெளிச்சம் தினசரி நாளிதழ் கண்டது நேற்று ஒரு மணி நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தவர்கள் வெளியேறாமல் இருந்ததால் புது நகர் உதவி ஆய்வாளர் பிரசன்னா  தலைமையிலான காவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட காவலர்களோடு சுழண்டனர் அந்தப் பணிகளை முடித்த அவர்களை வெளியேற்றிய பத்து நிமிடத்தில் 

மஞ்சக்குப்பம் பகுதியில் இருசக்கர வாகனங்களை ஒழுங்கு படுத்த அறிவுரை வழங்கிய பின்னர்

அடுத்த 10 நிமிடத்தில் முக்கிய சாலையாக திகழ்ந்துவரும் 

செயிண்ட் ஜோசப் மேல்நிலை பள்ளி சாலையில் பிரபல பெண்கள் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த சாலையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட  இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பவர்களை கண்டு இரண்டு முறை உதவி ஆய்வாளர் பிரசன்னா கண்டித்ததாக தெரிகிறது.

மீண்டும் அதே இடத்தில் ஒன்றுகூடிய இளைஞர்களின் வாகனத்தை காவல் நிலையத்திற்கு தட்டி தூக்கினார் புது நகர் உதவி ஆய்வாளர் பிரசன்னா 

அப்பொழுது அவழியாகச் தோழியுடன் சென்ற கல்லூரி பெண்களும் புது நகர் காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா நடவடிக்கை குறித்து கிசுகி  சித்தவாறு நம்ப போலீஸ் சகோதரர் வந்துவிட்டார் பயப்படாம போங்கடி என்று மகிழ்ச்சி பொங்க சென்றனர்.

மஞ்சக்குப்பம் செயிண்ட் ஜோசப் பெண்கள் கல்லூரி சாலையில்

ஏர்டெல் ஜியோ சிம் விற்பனையாளர்கள் அம்பர்லா அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்பொழுது நம் அங்கு விசாரித்த போது

கடலூர் உதவி ஆய்வாளர். பிரசன்னா தொடர்ந்து இப்பகுதியை கண்காணித்து வருவதாகவும் அவ்வபோது இங்கு பசங்கள் யாரும் கூட்டமாக நிற்கக்கூடாது கல்லூரி பெண்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் வியாபாரங்கள் நடைபெற வேண்டும் என அவ்வபோது எங்களுக்கு அறிவுறுத்தல் கூறுவார் என்றும் நாங்களும் இங்க கூடியிருக்கும் இளைஞர்களுக்கு அவ்வபோது இளைஞர்களிடம் கண்டித்தோம் ஆனால் மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்திருந்தனர் என்று எங்களிடம் தெரிவித்தார்.

கடலூருக்கு கிடைத்த  வரப்பிரசாதம் புதுநகர் உதவி ஆய்வாளர் என்று அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மனதார பிரசன்னாவின் நடவடிக்கை குறித்து வாழ்த்து தெரிவித்தனர்

  சட்ட ஒழுங்கு மட்டுமல்லாமல் பெண்கள் பாதுகாப்பு முன்னுரிமை அளிப்பதிலும் பெண்கள் மனதில் அண்ணனுக்கான ஸ்தானத்தை பிடித்துள்ளார் பிரசன்னா இது போன்று மேலும்

 அவ்வபோது மிகத் தரமான நடவடிக்கைகள் கண்டு கடலூர் மக்கள் பாராட்டு பெற்று காவல்துறைக்கு நற்பெயர் சேர்க்கும் பிரசன்னாவுக்கு நாமும் வாழ்த்து தெரிவிப்போம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!