பரங்கிப்பேட்டையில் வி.ஏ.ஓ அலுவலகம் கட்டித்தரகோரி கவுன்சிலர் அருள் முருகன் கோரிக்கை!


கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சி கவுன்சிலர் கோ.அருள் முருகன் அவர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டது என்னவென்றால் பரங்கிப்பேட்டையில் வி.ஏ.ஓ அலுவலகத்திற்கு சொந்தமான கட்டிடம் இல்லாததினால் தற்போது பரங்கிப்பேட்டை வண்டிக்கார தெருவில் உள்ள பழுதடைந்த முன்னாள் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் இயங்கி வருகிறது இப்பள்ளி கட்டிடமானது மிகவும் சேதம் அடைந்து விழுகின்ற நிலையில் உள்ளது.


இந்த இடத்திற்கு ஏராளமான பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்கு தினமும் சென்று வருவதற்கு அச்சமடைந்து வருகின்றனர் இதற்கு தீர்வாக  ஊரின் மையப் பகுதியான கச்சேரி தெருவில் வருவாய் துறைக்கு சொந்தமான பாலடைந்த நிலையில் பயன்பாடு இன்றி காலியிடம் ஒன்று உள்ளது.

பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் வி.ஏ.ஓ அலுவலகத்தை அங்கு அமைத்தால் அனைவருக்கும் மிகுந்த பயனுள்ளதாக  இருக்கும் என்பதினால் எனவே வி.ஏ.ஓ அலுவலகம் அங்கு அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!