அரக்கோணம் எம்.ஆர்.எப் ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் எம்.ஆர்‌ எப் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் தேசிய ஒருங்கிணைப்பாளர் அகில இந்திய இளைஞர் அணி காங்கிரஸ் வழக்கறிஞர். நரேஷ் குமார்,  ஒன்றிய கவுன்சிலர். ஆஷா பாக்கியராஜ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அரக்கோணம் இச்சிப்புத்தூரில் எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. 

இங்கு ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வரும் தொழிலாளர்கள், தங்களுக்கு சம்பள உயர்வு, நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போன்று உணவு வசதி, பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடத்தில் தொழிற்சாலை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தொழிலாளிகள் கலைந்து சென்றனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!