சூளேஸ்வரன்பட்டி மதரஸயே ரஹ்மானிய்யா (சிறார் ஒழுக்க நெறி மேம்பாட்டு கலாசாலை)57-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 11-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா!
திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி செம்பா கவுண்டர் காலனி பள்ளிவாசலில் மதரஸயே ரஹ்மானிய்யா (சிறார் ஒழுக்க நெறி மேம்பாட்டு கலாசாலை)57-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 11-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் ஆலிஜனாப் எம்.பத்ருதீன் மஸ்ஜிதே ரஹ்மானிய காலனி பள்ளிவாசல் தலைவர் &முத்தவல்லி அவர்கள் தலைமையில், வரவேற்புரை: ஆலிஜனாப் A.சிராஜுதீன் காலனி பள்ளிவாசல் செயலாளர் அவர்கள் முன்னிலை எம்.எஸ்.காஜாஉசேன் காலனி பள்ளிவாசல் பொருளாளர் 7-வது வார்டு கவுன்சிலர் எஸ்.கமாலுதீன் ஆடிட்டர் (முன்னாள் கவுன்சிலர்) ஏ.கே.இப்ராஹிம் துணை முத்தவல்லிஎம்.முஸ்தபா துணை செயலாளர் இவர்களின் முன்னிலையில்கலகலப்பான இஸ்லாமிய பட்டிமன்றம் தீன் பேச்சுகள் கிராத் போட்டி கேள்வி பதில் பல எண்ணற்ற குழந்தை செல்வங்கள் சொற்பொழிவு செய்தார்கள் பரிசுப் பொருட்களையும் பெற்றுக் கொண்டார்கள் ..!!!குர்ஆனை மனப்பாடம் செய்ததற்கு 3-பெண்கள் பட்டத்தை கணவர்கள் பெற்றுக் கொண்டனர். சிறப்பித்தவர்கள்: பொள்ளாச்சி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள்,நபிமார்களின் வாரிசார்கள், உஸ்தாபீகள்,பிலால்,காலனி பள்ளிவாசல் செயற்குழு உறுப்பினர்கள் (ம) ஜமாத்தார்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்..!!மதரஸா ஆசிரியர்களுக்கு மிக அற்புதமாக குழந்தை செல்வங்களுக்கு தீன்கல்வியை கற்றுக் கொடுத்ததற்கு கண்ணீர் மல்க நன்றியும் பாராட்டியும் தெரிவித்து கொண்டு உங்களுக்காக நாங்கள் தூவா செய்கிறோம் பெற்றோர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
நன்றியுரை அலி ஜனாப் S.A.முபாரக் காலனி பள்ளிவாசல் நிர்வாகி அவர்கள்வருகை தந்த அனைவருக்கும் இறுதி மூச்சு வரை ஈமானுடன் வாழ்ந்து மறுமையில் நாம் அனைவரும் ஒன்றாக சொர்க்கத்தில் நுழைவோம் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே என்றும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.


கருத்துகள்
கருத்துரையிடுக