ஆற்காடு அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி, இருவர் படுகாயம் !!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சேட்டு இவரின் மகன் பிரகாஷ் (வயது 23) என்பவர் இன்று காலை திமிரியில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அவருடன் அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தம்மாள் (வயது 59) மற்றும் பிரவீன் (வயது 13) ஆகியோரும் பயணித்தனர். மகாலட்சுமி கல்லூரி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த டாடா ஏசி வாகனம் இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் ஆற்காடு அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த கோவிந்தம்மாள் மற்றும் பிரவீன் இருவரும் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து திமிரிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!