4 வருட சுரங்க பாதை பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் கைனூர் தலைவர் கோரிக்கை மனு!!

4 வருடமாக ஆமை வேகத்தில் நடந்து வரும் சுரங்க பாதை பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என கேட்டு கைனூர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி கோரிக்கை மனு கொடுத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே பணிகள் விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கைனூர் ஊராட்சி மன்ற தலைவர். உமா மகேஸ்வரி பொதுமக்கள் சார்பில் மனு ஒன்றை அதிகாரிகளும் கொடுத்தார். அவரது அந்த மனுவில் கேட்டுக்கொண்டதாவது ஐயா வணக்கம் அரக்கோணம் வட்டத்தில் கைனூர் கிராமம் உள்ளது. இந்த மக்களுக்கு முக்கிய பாதையாக எல்சி 32 ரயில்வே சுரங்க பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை மக்களுக்காக  நான்கு வருடங்களுக்கு முன் பணிகள் துவங்கியது ஆனால் இது நாள் வரை பாலத்தின் பணிகள் முழுமை அடையாமல் இருந்து வருவதால் பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றி வருகிறார்கள் ஆகவே சுரங்கப் பாதை பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு மனுவில் உமா மகேஸ்வரி கேட்டுக்கொண்டார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!